கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2024, 11:54 am

திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சி, தற்போது ஆட்சியில் உள்ளதால் திமுகவுக்க எதிராக எந்த விமர்சனமும் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மாநாட்டுக்கு திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்ததும் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என முதலில் வலியுறுத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று வலியுறுத்தும் விடியோவை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

திமுக கூட்டணிக்குள் சற்று சலசலப்பு இருக்கும் நிலையில், திடீரென, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தும் பழைய விடியோ ஒன்றை திருமாவளவன் தற்போது பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

திமுக கூட்டணி ஆட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கு வேண்டும் என்று திருமாவளவன் மறைமுகமாக வலியுறுத்துகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: வீட்டு மொட்டை மாடியில் கொடூரமாக சொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி : அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இதனிடையே வீடியோவை திருமாவளவன் பதிவிட்ட பின்பு டெலிட் செய்துள்ளார். ஆனால் மறுபடியும் அந்த வீடியோ பகிரப்பட்டு, பின்பு இரண்டாவது முறையாக டெலிட் செய்யப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!