ரூ.30,000 செலுத்தினால் ஆபாசப் படம் பார்த்ததில் இருந்து விடுபடலாம்.. சைபர் கிரைம் முக்கிய எச்சரிக்கை!

Author: Hariharasudhan
16 October 2024, 7:15 pm

ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதால் கணினி முடக்கப்பட்டுள்ளது என்ற வரிகளுடன் வரும் மெசேஜை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டின் இணையவழி குற்றதடுப்புப்பிரிவு (TN Cyber Crime) தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இணையவெளிரோந்துக் குழுவானது, தேசிய சைபர்கிரைம் அறிக்கையிடல் போர்டல் (cybercrime.gov.in) போன்ற போலியான இணையதளத்தை அடையாளம் கண்டுள்ளது.

இந்த இணையதளத்தில் “உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது” என்று அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பது போல் காண்பிக்கப்பட்டு, மேலும் அதில் “கார்டு விவரங்கள், காலாவதி தேதி மற்றும் CVV” போன்ற முக்கியமான தகவலைப் பதிவு செய்து பணம் பறிக்க வழிவகை செய்ய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, இதில் ‘நீங்கள் சில ஆபாச இணையதளங்களைப் பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தியோடு IPC பிரிவுகளையும் உள்ளிட்டு, 30,290 ருபாய் அபராதம் என காண்பித்து பொதுமக்களை ஏமாற்ற இணைய மோசடிக்காரர்கள் முற்பட்டு உள்ளனர்.

இந்த அபராதத்தொகையை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்ற செய்தியோடு, கிரெடிட்கார்டு விவரங்களையும் உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த கிரெடிட் கார்டு விவரங்கள் இதன் மூலம் திருடப்பட்டு, பின்னர் மோசடி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பிஞ்சுக் குழந்தைனு கூட பார்க்கலையே.. +2 மாணவி உட்பட 2 பேர் கொலை.. தலைமறைவான சித்தப்பா!

மேலும் சைபர் கிரைம் அறிக்கையின் அடிப்படையில், விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்த மோசடி இணையதளத்திற்கு சேவை வழங்கிய சீனாவில் உள்ள இணைய பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்டு, சட்டவிரோத இணையதளம் உடனடியாக அகற்றப்பட்டது. இந்நிகழ்வு URLகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இல்லையெனில், குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை ஏற்படுத்தும்.

Cybercrime

அது மட்டுமல்லாமல், இந்திய தபால் துறையில் இருந்து பார்சல் வந்ததாகக் கூறி மற்றொரு மோசடி தற்போது நிலவி வருகிறது. “உங்கள் பார்சலை எங்களால் டெலிவரி செய்ய முடியவில்லை. மேலும் டெலிவரி செய்ய மீண்டும் முயற்சிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்க” என்று SMS வருகிறது.

இதனை கிளிக் செய்யும் பொழுது பார்சலை திரும்ப எடுத்து வருவதற்கான கட்டணமாக (Re-attempt fee) 25 INR கோருகிறது. இதுவும் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்போது சைபர் கிரைம் மோசடி அரசு இணையதளம் போன்று அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 251

    0

    0