புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்துள்ள அரிமளத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது: பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகம். நாங்கள் கல்வி கற்க கூடாது மீறிக் கற்றால் வாயாலே தின்று வாயாலே மலம் கழிக்கும் வௌவாலை போல முகம் கொண்ட மைத்ராச ஜோதிகள் என்ற பேயாக அடுத்த ஜென்மத்தில் பிறப்பாய் என்று மனுதர்மம் சொல்கிறது.
அடுத்த பிறவியில் நாயாக அல்லது பேயாக எதுவாக வேண்டுமானாலும் அகலாம் ஆனால் இந்த ஜென்மத்தில் படித்த மனிதனாக போ என்று எங்கள் முன்னோர்கள் எங்களை படிக்க வைத்தனர். அதில் முக்கியமானவர் இரட்டைமலை சீனிவாசன், காமராஜர் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோர்.
மேலும் படிக்க: எங்க செக் வைக்கணும், எந்த நேரத்தில் திமுகவிடம் பேசணும்னு எங்களுக்கு தெரியும் : சூடான திருமாவளவன்..!!
பிஜேபி காரர்களுக்கு ஒரே மருந்து ராமர். யாராவது ஒரு பிஜேபி காரராவது தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறார்களா? ஏனென்றால் தற்போது ராமருக்கு மார்க்கெட் இல்லை. கோவிலை வைத்து வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். கோவில் கட்டி முடித்த பிறகு ராமருக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.
ராமர் கோவில் இருக்கும் தொகுதியிலே அகிலேஷ் யாதவ் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை பொதுத் தொகுதியில் நிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கி உள்ளார். கோவில் கட்டியவர் கோவிந்தா ஆகிவிட்டார். அதோடு ராமருக்கு மார்க்கெட் இல்லை. மார்க்கெட் இல்லாத நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க மாட்டார்கள்.
யாராவது தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறார்களா சொல்ல மாட்டார்கள். இதே மத்திய அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்கள் சந்தித்தபோது விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கேட்டால் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுவார். கற்பழிப்பு நடந்துள்ளது என்று கேட்டால் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுவார்.
அதேபோல உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் நீங்களும் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என்று கூறுங்கள்.
தேர்வில் வெற்றி பெற வேண்டுமா நீங்களும் ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என பேப்பரில் எழுதிவிட்டு வாருங்கள் தேர்ச்சி பெற்று விடலாம்.
ஜெய் ஸ்ரீ ராம் பாரத மாதாவிற்கு ஜே ஏதோ இவர்கள் மாதா போல சொல்கிறார்கள். பாரத மாதா என்ன உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா? மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று வன்புணர்வு செய்தவர்கள்.
மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவியை கூட்டு வன்புணர்வு செய்தவர்கள் நீங்கள் பாரத மாதாவிற்கு ஜே என்று சொல்கிறீர்கள்
எட்டு வயது குழந்தை ஆசிபாவை கோவிலுக்குள் வைத்து கற்பழித்த நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கின்றீர்கள்.
நல்லவேளை பாரதமாதா உயிரோடு இல்லை அது ஒரு கற்பனை இருந்திருந்தால் அந்த பாரத மாதாவையும் கதற கதற கற்பழித்து கொன்று இருப்பார்கள் என அவர் கூறினார்.
சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…
களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…
வடிவேலுவின் கம் பேக் கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில்…
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…
This website uses cookies.