ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவிய நிலையில், அம்மாநில பாஜக சார்பில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைமையகத்துக்கு ஜிலேபி அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: “ஹரியானாவில் கிடைத்த எதிர்பாராத முடிவுகள் குறித்து நாங்கள் (காங்கிரஸ்) அலசி வருகிறோம். பல்வேறு தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவும் இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும், அங்கு அயராத கடின உழைப்பை கொடுத்த எங்களது தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி” என்பது, ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் (Rahul Gandhi) எக்ஸ் தளப் பதிவு.
காரணம், விவசாயிகள் பிரச்னையை முதன்மையாகக் கொண்டு ஹரியானாவில் தனித்து களம் கண்ட காங்கிரஸ், கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கியது. ஹரியானாவில் ஆட்சி மாற்றம் நிகழும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில், மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது பாஜக. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைத் தாண்டி 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் மற்றவை 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதனால் காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது எனலாம். காரணம், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முந்தைய காலத்தை விட அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதுடன், மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. எனவே, காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் சற்று வலுவடைந்ததாக கருதப்பட்டன. இருப்பினும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது எனத் தோன்றலாம்.
இதையும் படிங்க: லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
ஆனால், அங்கும் காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவின் தனித்த வெற்றி இடங்களை விடக் குறைவாகும். ஏனென்றால், ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிலும், 7 சுயேட்சை வேட்பாளர்கள் ஜம்முவில் வெற்றி பெற்ற நிலையில், 6 காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றது காங்கிரஸ் மேலிடத்தை அசைத்து பார்த்துள்ளது.
இந்த நிலையில், ஹரியானா பாஜக, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைமையகத்துக்கு ஜிலேபி அனுப்பியுள்ளதாக, சில புகைப்படங்களையும், ஜிஎஸ்டி வரியுடன் கூடிய பில்லையும் ஹரியானா பாஜக தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹரியானாவில் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, “ஜிலேபி நாடு முழுவதிலும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை உருவாக்குவதற்காக ஏற்றுமதியும் ஆகிறது. ஆனால், ஜிலேபி விற்பனையாளர்கள், மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்” எனப் பேசிய அவர், பாஜகவினருக்கு ஜிலேபி சாப்பிட மட்டுமே தெரியும் எனவும், அதை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்பது கூடத் தெரியாது எனவும் கடுமையாக பேசியிருந்தார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகத்தின் கோவையில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் மைசூர் பாக் வாங்கிச் சென்றார் ராகுல் காந்தி. பின்னர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற்ற பிறகு, ராகுல் காந்தி ஸ்வீட் பாக்ஸை வைத்து முடித்துவிட்டார் என மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். அது மட்டுமல்லாமல், சமீபத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டாலின், ‘உங்களுக்கான ஸ்வீட் பாக்ஸ் ஒன்று பாக்கி இருக்கிறது’ என சைக்கிளிங் சென்ற புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
This website uses cookies.