டாப் நியூஸ்

உளவுத்துறை அறிக்கையால் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு : சமூக நீதிக்கு அஸ்திவாரம்?!

தமிழகத்தில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு பின்புலத்தில் உளவுத்துறையை அறிக்கை உள்ளது அம்பலமாகியுள்ளது.

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்பின்னணியில் நடந்தது என்ன. இதற்கு உளவுத்துறை எப்படி முதல்வருக்கு அறிக்கை அளித்துள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
வெளிநாடு செல்வதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்தில் அமைச்சரவை மாற்றமா எனக்கு எந்த தகவலும் தெரியாது, என்று பத்திரிக்கையாளர்களைப் பார்த்து நகைச்சுவை வார்த்தைகளை உதிர்த்தார்.

திரும்பி வந்தவுடன் பத்திரிகையாளர்களிடம், ‘மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’ என, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். இதனால் அமைச்சரவையில் யார் மாற்றம் செய்யப் போகிறார்கள் என்ற ஜுரம் காற்று வேகத்தில் பரவியது. ஆனால் எதிர்பார்த்த நிலையில் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதமாக துணை முதல்வர் ஆவார் உதயநிதி ஸ்டாலின் என பலரும் கூறி வந்தனர். அமைச்சர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என உறுதியாக கூறினர், இதை உதயநிதி மறுத்தார்.எனக்கு திமுக தொண்டர் பதவியே பெருமையானது. இதைவிட சிறந்த பதவி எனக்கு கிடைக்காது என்றார்.

இந்நிலையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது விமர்சனத்துக்கு நான் முற்றுப்புள்ளி வைப்பேன் என்றார். ஆனால், அமைச்சரவை மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது., மாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அமைச்சரவையில் இருந்து, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மூத்த அமைச்சர்கள் சிலரின் துறைகள் மாற்றப்பட்டுஉள்ளன.

இதன் பின்னணி குறித்து, தி.மு.க., மற்றும் தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது: அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது, மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், சட்டசபையில் கவர்னர் வெளிநடப்பு செய்த போது, அவரை, ‘வெளியில் போ’ என்று கூறியவர் பொன்முடி. அவர் தொடர்ந்து, கவர்னரை ஒருமையில் விமர்சித்து வந்தார்.. இது, உயர்கல்வி துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என, முதல்வரிடம் கல்வியாளர்கள் தெரிவித்தனர். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி 100 ரூபாய் நாணயம் வெளியிட்டுக்கும் பின்பு திமுகவின் மீது பாஜக விமர்சனமும் பதம் பார்ப்பதாக இல்லை. அதுபோல் திமுக விமர்சனமும் பாஜக மீது இதம் பார்ப்பதாகவே உள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பு திமுக கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்காது என அறிவித்த திமுக. திடீரென அந்தர் பல்டி அடித்தனர்.

அரசியல் வேறு அரசாங்க நிகழ்ச்சியில் புறக்கணிக்கவில்லை எனக் கூறி முதல்வர் தேநீர் விருந்தில் பங்கேற்றார். இதற்கு பின்பு முதல்வருக்கும் கவர்னருக்கும் நெருக்கம் அதிகமாயிருக்கிறது. தற்போது, பல பல்கலைகள் நிதி இல்லாமல் சிரமப்படுகின்றன. துணைவேந்தர் நியமனத்திலும் இழுபறி நீடிக்கிறது. இதே நிலை நீடித்தால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும். கல்வி தரம் குறையும் என்பதால், கவர்னருடன் சுமூக நிலையை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதனால் தான், பொன்முடியிடம் இருந்து, உயர்கல்வி துறை பறிக்கப்பட்டுள்ளது. அவர் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மனோதங்கராஜ் பதவி பறிப்பு

முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளங்களில், பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார். அதில், கவனம் செலுத்திய அளவுக்கு, தன் வசமிருந்த பால் வளத்துறையின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லை. மாவட்டத்தில் கட்சியினரை அரவணைத்து செல்லவில்லை.

நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டார். மாவட்டத்தில் கனிம வள கொள்ளைக்கு அமைச்சரே ஆதரவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு மீதும் உரிய பதில் அளிக்கவில்லை.

ஆவின் பாலில் தண்ணீர் கலக்கப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இப்பிரச்னையை மூடிமறைக்க ஆர்வம் காட்டினார். துறையின் முக்கிய அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி, தன் இஷ்டத்திற்கு ஒப்பந்ததாரர் தேர்வில், அவரது மகன் கவனம் செலுத்தினார்.
இதை, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், நிதித்துறையின் உயர் அதிகாரி வாயிலாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இது குறித்து அறிக்கையை ஏற்கனவே உளவுத்துறை முதல்வருக்கு தந்துள்ளது. ஆதாரபூர்வமான தகவல்கள் காரணமாக, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மஸ்தான் பதவி பறிப்பு:

மரக்காணம், செய்யூர் போன்ற இடங்களில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள்.
இதற்கு பின், அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கடி துவங்கியது.
கள்ளச்சாராய வியாபாரிக்கு அமைச்சர் மஸ்தான், ‘கேக் ஊட்டி விடும் போட்டோ’வை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

கள்ளச்சாராய வியாபாரியுடன், மஸ்தான் குடும்பத்திற்கு இருந்த நெருக்கம்; கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் குடும்பத்தினர் தலையீடு. அ.தி.மு.க.,வினருக்கு அரசு வேலைகள் ஒதுக்கியது ஆகியவற்றை கட்சியினரின் மனக்குமுறலோடு தலைமைக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

இறால் பண்ணையில் பெருமளவு முதலீடு செய்திருப்பதும், தலைமையின் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன், அவரிடம் இருந்த மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது, அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களையும் உளவுத்துறையை அனுப்பியுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி பறிப்பு :

சுற்றுலா துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், துறையில் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கட்சியினருடனும் சுமூக உறவு இல்லை. இதன் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கயல்விழியிடமிருந்து ஆதி திராவிடர் நலத்துறை பறிக்கப்பட்டு, மனிதவள மேலாண்மை துறை வழங்கப்பட்டுள்ளது.

துறையில், இவரது கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாக, புகார் எழுந்ததால், அவருக்கு துறை மாற்றப்பட்டுள்ளது. கயல்விழி தேவேந்திர குல வேளாளர் வகுப்பை சேர்ந்தவர். அந்த சமூகத்தினர் தங்களை பட்டியல் இனத்திலிருந்து நீக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, அவர் மாற்றப்பட்டதும், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மதிவேந்தனுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த மஸ்தான் நீக்கப்பட்டதால், ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நாசருக்கு, மீண்டும் யோகம் அடித்துள்ளது. அவர் சிறுபான்மையின நலத்துறை அமைச்சராகி உள்ளார். செந்தில் பாலாஜிக்கு மின்துறை எதிர்பார்த்தது தான்.

சமூக நீதிக்கு அஸ்திவாரம் :

‘தி.மு.க., ஆட்சியில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கட்சியில், 23 எம்.எல்.ஏ.,க்கள் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தும், மூன்று பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தை சேர்ந்த, 19 பேர் எம்.எல்.ஏ.,க்களாக இருந்தும், மூன்று பேருக்கு தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் குற்றம் சாட்டினார். இதற்கிடையில், கூட்டணி ஆட்சி என்று வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, வன்னியர் சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கோவி.செழியனுக்கும், அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. முதல்வர் வெளிநாடு சென்று வந்த பிறகு அனைத்து நடவடிக்கைகளும் உளவுத்துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே தான் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!

பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…

20 minutes ago

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

1 hour ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

2 hours ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

2 hours ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

3 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

4 hours ago

This website uses cookies.