மா இலை பறிச்சது குத்தமா? கத்திக்குத்தில் முடிந்த வாக்குவாதம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2024, 5:29 pm

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூர் மண்டலம் யானைமலைகூடுரு ராமலிங்கேஸ்வரா நகரை சேர்ந்த மிர்யாலா அர்ஜூனராவ் (61) விநாயக சதுர்த்தியை கொண்டாட உறவினர் வீட்டிற்கு மா இலை பறிக்க சென்றார்.

அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கெத்தம் நஞ்சாரய்யா (36) அனுமதியின்றி எங்கள் வீட்டில் உள்ள மா இலைகளை எப்படி பறித்து செல்வாய் என்று அவரிடம் வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் அதிகமாகவே நஞ்சாரய்யா வீட்டிற்குள் சென்று சமையலறையில் இருந்து கத்தியை கொண்டு வந்து மிர்யாலா அர்ஜுன ராவை தாக்கினார்.

இதில் அதிக அளவில் இரத்தம் வடிந்த நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து பெனமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 318

    0

    0