தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். வருகிற 2026ஆம் ஆண்டு தேர்தலை இலக்காக கொண்டுள்ளார். கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவர் அடுத்தாக கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். இதனையடுத்து முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியை விஜய் அறிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் பல இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது.
தவெக மாநாட்டிற்கு அனுமதி கேட்டு எஸ்பியிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மாநாடு நடைபெறும் இடம் பேருந்து செல்கின்ற முக்கிய தேசிய நெடுஞ்சாலைக்கும் ரயில் போக்குவரத்திற்கும் இடைப்பட்ட பகுதியாக உள்ளது. எனவே அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபடும் சூழல் உருவாகும் இதனை கருத்தில் கொண்டே காவல்துறை சார்பாக அனுமதி கொடுப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மாநாட்டு மேடை அமையும் பகுதி தொடர்பாவும், மாநாட்டிற்கு வருபவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாகவும் 21 கேள்விகளை கேட்டு தவெக தலைவருக்கு விழுப்புரம் மாவட்ட எஸ்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த கேள்விகளுக்கு 5 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விவரம் என்ன ?
மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள் யார்.? பெயர் பட்டியல்.?
மனுவில் மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?
மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்கள் யார்? முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா?
மாநாட்டில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் மற்றும் கட்சியின் தொண்டர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன?
மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம் என்ன.?
தவெக மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளது? .
மாநாடு நடைபெறவுள்ள பகுதியில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம்
மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள்? ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விவரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை?
மாநாட்டில் வாகனங்கள் நிறுத்து மிடங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா?
மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம்.
மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
அடிப்படை வசதிகளின் விவரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா? அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா?
மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ளதா.?
மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு செய்யப்படவுள்ள பாதுகாப்பு வசதிகள் என்ன.?
மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? மாநாடு அருகிலையே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா?
மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விவரம் கடிதம்
மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம் என்ன.?
மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா? மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸின் விவரங்கள்.
மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கும் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.