தங்கள் கடமையை செய்யாதவர்களை “பெண் கல்வி” சுட்டெரிக்கட்டும் : பரபரப்பு பதிவு போட்ட ஜிவி பிரகாஷ்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 8:08 pm

திருவண்ணாமலை செய்யாறில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பல வருடமாக கல்லூரியின் சுற்றுச்சுவர்களும் கழிவறைகளும் பராமரிக்கப்படாமல் இருந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

மேலும் கல்லூரி வளாகத்திலேயே பல இடங்கள் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே புதர்கள் மண்டி காணப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரியின் கழிவறையில் பாம்பு குட்டிகள் நெளியும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

பெண்கள் கழிவறையில் பாம்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் கலைவாணி தெரிவித்துள்ளதோடு கழிவறையை தூய்மைபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இருப்பினும் இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்புகள் நெழியும் வீடியோ குறித்து ஜிவி பிரகாஷ்குமார் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளப்பதிவில், தங்கள் கடமையை செய்யாதவர்களை “பெண் கல்வி” சுட்டெரிக்கட்டும் என சாபம் விடும் தொனியில் பதிவிட்டுள்ளார்.

  • adhik ravichandran talk about shooting experience of ajith kumar இரவு பகல் பார்க்காமல் நடித்த அஜித்! ஒரே நாள்ல ரெண்டு ஷூட்டிங்… அடேங்கப்பா!