கைகோர்த்த ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு.. தென் மாநிலங்களில் இப்படி ஒரு நிலையா?

Author: Hariharasudhan
21 October 2024, 3:49 pm

நாமும் பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமே என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வு, இன்று (அக்.21) சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது பேசிய அவர், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க எனக் கூறுவார்கள். அந்த 16 என்றால் 16 குழந்தைகள் அல்ல, 16 செல்வங்கள் ஆகும். அவை என்னவென்று கேட்டால், மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், புகழ் ஆகியவதான் பதினாறு செல்வங்கள் ஆகும்.

இவ்வாறான பதினாறு செல்வங்களைப் பெற்று வாழுங்கள் என அப்போது வாழ்த்தினார்கள். ஆனால் தற்போது இவ்வாறு வாழ்த்துவதில்லை, தற்போது அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றே கூறுகிறோம். ஆனால், இன்று நாடாளுமன்த் தொகுதிகளின் எண்ணிக்கை குறைகின்ற போது, ஏன் நாம் அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும், நாமும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாமே என்ற நிலை தோன்றுகிறது” எனப் பேசினார்.

முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இவ்வாறு பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் ஒருசேர ஒரே கருத்தை கூறுவது பேசு பொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: கோர்ட் சொன்னாலும் நான் கேட்கல.. கடைசியாக இருக்கும் வரை.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இதனை ஆராய்ந்து பார்த்தால், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே இதன் பொருள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 174

    0

    0