பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு…!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2024, 3:53 pm

காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டித்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால், நடப்பாண்டு, செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘அண்ணனும், அம்மாவும் திட்டுவாங்க’… காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்… பயத்தில் 10ம் மாணவி செய்த செயல்!!

இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளரிடம் பேசி பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்.

காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Keerthy Suresh new glamorous look தாலியுடன் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 178

    0

    0