பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற எக்ஸ் தளப் பதிவு பரபரப்பான அரசியலை பேசிய நிலையில், அதற்கு ராமதாஸ் பதிலளித்துள்ளார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று (நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அவர் பதிவிட்ட பழைய கழிதலும் புதியன புகுதலும் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராமதாஸ், “பாஜகவில் இருந்து நாங்கள் விலகவில்லை. அந்தப் பதிவுக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மேல் இருக்கிறது. எனவே, கூட்டணி குறித்து அப்போது அறிவிப்போம். மேலும் நான் பதிவிட்ட நன்னூல் சூத்திரம் பதிவிற்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெளிவுபடுத்தினார்.
இதனை அடுத்து, தெலுங்கானாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்போவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராமதாஸ், தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவது குறித்த அறிவிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற திமுகவின் சமூகநீதி முகமூடியை கிழித்துள்ளது என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தனது கடும் கண்டனத்தை திமுக அரசுக்கு அவர் தெரிவித்தார். முன்னதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: அப்டேட் இல்லாத ஆளு அவரு .. மா.சு. சூசகம்
இதில் தனது அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் எதிரி யார் என்பதையும், தனது கட்சியின் செயல்திட்டங்களையும் விஜய் அறிவித்தார். இதற்கு அனைத்து தரப்பட்ட அரசியல்வாதிகளும் வரவேற்பு அளித்த நிலையில், திமுக அமைச்சர்களின் பேச்சுக்கள் மூலம் விஜய் மீதான திமுகாவின் எதிர்ப்பை அறிய முடிகிறது. மேலும், அதிமுகவை ஒரு இடத்தில் கூட விமர்சிக்காதது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை, அதனால் விஜய் அது குறித்து பேசவில்லை என்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். சிங்கப்பூர் அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான…
அசுதோஷ் சர்மா யார்? ஐபிஎல் 2025 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் சர்மா தனது…
ஐபிஎல்லில் தேர்வாகச் செய்த பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என விக்னேஷ் புத்தூருக்கு தோனி அறுவுறுத்தியுள்ளார். சென்னை: 18வது ஐபிஎல்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் சக்திவேல் (27) என்பவர் தமிழக வெற்றி கழகத்தின்…
2026 தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் அரசியல்…
திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி: திருச்சி மாவட்டம்,…
This website uses cookies.