ஓபிஎஸ், இபிஎஸ் ஆக மாற்றம்.. தீயாக பரவிய வீடியோ.. ஆர்.பி.உதயகுமார் விளக்கம்!

Author: Hariharasudhan
24 October 2024, 3:34 pm

ஓ.பன்னீர்செல்வம் பற்றி பேசியதை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசியதாக வீடியோவை பரப்பி உள்ளதாக ஆர். பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் இன்று (அக்.24) மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகள் உடன் வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ” சாதாரண கிளைச் செயலாளரான என்னை, சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியினை, வாய்ப்பினை, பணியினை, பொறுப்பினை இன்றைக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜனநாயகத்தின் மாண்பினைக் காக்கின்ற வகையில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவமாக எனக்கு கொடுத்துள்ளார்.

அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத துரோகிகள், விரோதிகள் பிரபல ஊடகத்தில் வெளியான செய்தியைப் போன்று வெளியிட்டு உள்ளனர். எனவே, அவர்கள் மீது மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் காவல் துறையில் புகார் அளித்துள்ளோம். எனவே, அந்த புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோ அல்லது செய்தியானது முழுக்க முழுக்க அவதூறாக பரப்பப்பட்ட பொய்யான செய்தி.

Edappadi Palaniswami

நான் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசியதை திரித்து, வெட்டி, ஒட்டி வெளியிடப்பட்ட பொய்யான செய்தி. எனவே, அவர்கள் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இது தொடர்ந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தலைவலியாகும் தவெக மாநாடு.. என்னதான் செய்கிறார் விஜய்?

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை ஆர். பி..உதயகுமார் அவதூறாக பேசுவது போன்ற வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 186

    0

    0