டாப் நியூஸ்

‘திராவிடநல்’ விடுபட்ட சர்ச்சை.. ஸ்டாலினுக்கு ஆளுநர் பதிலடி!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் வார்த்தையை தவறவிட்ட நிகழ்வில், மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆர்.என்.ரவி பதில் அளித்துள்ளார்.

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள டிடி மண்டல அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைக்காட்சி பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதனையடுத்து நிகழ்ச்சி தொடங்கும் முன், முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அப்போது, “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது.

பின்னர், இது தொடர்பான காணொலிகள் வெளியான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு வாயிலாக ஆளுநர் கூறியதாவது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார். ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன்.

இதையும் படிங்க : திராவிடத்தை தவறவிட்ட ஆளுநர் மேடை.. கொந்தளித்த தமிழ்நாடு.. மன்னிப்பு கோரிய டிடி தமிழ்!

அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

7 minutes ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

49 minutes ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

2 hours ago

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

2 hours ago

ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…

3 hours ago

அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…

4 hours ago

This website uses cookies.