செந்தில் பாலாஜி தியாகமா செஞ்சாரு? திமுக தான் உள்ளயே தள்ளுச்சு : சீமான் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan26 September 2024, 1:56 pm
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் அளித்துள்ளதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் ,செந்தில் பாலாஜியின் தியாகம் பெரியது என்றும் கூறியிருந்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனங்களை வைத்திருக்கிறார். இது குறித்து சீமான் கூறியதாவது:-செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டா சிறைக்கு போனாரு?
மேலும் படிக்க: ஜிஎஸ்டியில் நிறைய தப்பு இருக்கு.. திருத்தம் கொண்டு வந்தால் எல்லோருக்கும் வாய்ப்புள்ளது : அமைச்சர் பிடிஆர்!
அப்படி செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால்.. நாட்டுக்காக தியாகம் செய்து விட்டு சிறைக்கு போனவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது? செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதே திமுக போட்ட வழக்கில்தான் என்றார்.
மேலும், அதிமுக ஆட்சியில் ஊழல் செய்ததாக வழக்கு போட்டதே திமுகதான். அவங்க கட்சியில் செய்தால் ஊழல், இவங்க கட்சியில் செய்தால் அது தியாகமா? என சரமாரி கேள்வி எழுப்பினார்.