டாப் நியூஸ்

முறிந்ததா அண்ணன் – தம்பி உறவு? விஜயை வெளுத்து வாங்கிய சீமான்!

எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான் எனக் கூறிய சீமான், அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது என காட்டமாக விமர்சித்துள்ளார்.

சென்னை: மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நேற்று (நவ.1) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சென்னையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும், இல்லையென்றால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன இரண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது? திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?” என தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் பேசிய சீமான், “அண்மையில் வந்த படத்தில் (கோட்) வில்லனாகவும், கதாநாயகனாகவும் அவரே நடித்ததால் குழம்பிவிட்டார் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ.. ஒரு சாலையில் இடப்பக்கம் நிற்க வேண்டும் அல்லது வலப்பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும்” என்றார்.

தொடர்ந்து, “ நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து, அதில் பி.எச்டியே வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி, இது நெஞ்சு டயலாக்” என விஜயை தாக்கிப் பேசினார் சீமான்.

இதனால் எழுந்த கடும் ஆரவாரத்துக்கு இடையே பேசிய சீமான் “எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்னிடம் காட்ட வேண்டாம். 2026ஆம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது” என்றார்.

இதையும் படிங்க: விஜய் ஆரம்பிக்கும் புதிய டிவி சேனல்… என்ன பெயர் தெரியுமா?

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், “திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், விஜய் மாநாட்டுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “விஜயின் கொள்கை ஆயிரம் இருக்கட்டும். அவரின் கொடி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம் தான் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” எனக் கூறியிருந்தார்.

Hariharasudhan R

Recent Posts

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

48 minutes ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 hour ago

குட் பேட் அக்லி திரைப்படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? சந்தேகத்தை கிளப்பிய பிரபலம்..

வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

2 hours ago

2ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோருக்கு தனியார் பள்ளி மிரட்டல்.. TC வாங்க மிரட்டி ஒப்பந்தம்!

கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு… குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…

3 hours ago

நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…

இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…

3 hours ago

This website uses cookies.