தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ₹20 லட்சம் கொடுங்க… திமுக அரசுக்கு DEMAND வைத்த செல்லூர் ராஜூ!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2024, 1:39 pm

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று காலை 5 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தனியார் விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி மற்றும் கனி ஆகிய மூன்று பேர் எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்து நடைபெற்ற இடத்தையும் , மூன்று பேர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையையும் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அதன்பின் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது, கள்ளச்சாராயத்துக்கு இறந்தவர்களுக்கு இந்த அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தது, அதேபோல் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இந்த அரசு இழப்பீடு தொகையை தர வேண்டும்.

மேலும் படிக்க: மனைவியுடன் ஒரே கட்டிலில் இருந்த நண்பன்.. துவண்டு போன கணவன் : உயிரை பறித்த உல்லாசம்… கடைசியில் ட்விஸ்ட்!

அது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு ஆறுதலாக அமையும், அதே போல் கடந்த வருடம் இதுபோல் உள்ள கட்டிடத்திற்கு மதுரை மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது இந்த அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.

இனியும் மதுரை மாநகராட்சி மந்த நிலையில் இல்லாமல் உடனடியாக இது போல் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!