பாஜக அரசின் கொள்கையை ஏத்துக்க முடியலைனா தமிழக அரசுக்கு நிதி கிடையாது : பாஜக பிரமுகர் திட்டவட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 செப்டம்பர் 2024, 2:14 மணி
Rama
Quick Share

பாஜக மாநில பொது செயலாளரும், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசனின் 61 ஆவது பிறந்த நாளையோட்டி மதுரையில் தனியார் விடுதியில் நடைபெற்ற விழாவில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காப்பீடு அட்டை மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராம.ஸ்ரீனிவாசன் கூறுகையில் “பாஜகவில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மிக தீவிரமாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கையில் பாஜக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது, ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் பஜகவில் உறுப்பினராக சேரலாம்.

பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 17 கோடியை தாண்ட வாய்ப்புள்ளது, பாஜக ஒருங்கிணைப்பு குழு கட்சியின் அமைப்பு பணிகளை மேற்க் கொள்ளும், அதிமுகவை விமர்சனம் செய்வது பாஜகவின் நிலைப்பாடு அல்ல, அதிமுக பாஜகவை விமர்சனம் செய்வதால் பாஜக அதிமுகவை விமர்சனம் செய்கிறது.

அதிமுக பாஜகவை விமர்சனம் செய்வதை நிறுத்தினால் அதிமுகவை பாஜக விமர்சனம் செய்யாது. அதிமுக முதலில் இரட்டை தலைமையில் செயல்பட்டது, பின்னர் ஒற்றை தலைமை மோரிக்கை வலுத்தது.

பாஜக கூட்டுத்தலைமை மீது நம்பிக்கை உள்ள கட்சியாகும், பாஜகவில் குழு அமைக்கப்பட்டதை அதிமுக விமர்சனம் செய்ய தேவையில்லை.

கொள்கையை விட்டு கொடுத்து நிதி வாங்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத போது மாநில அரசுக்கு நிதி கொடுக்க வேண்டிய அவசியமில்லையே?, அனைவருக்கும் கல்வி திட்டம் மத்திய அரசின் திட்டமாகும், ஆகவே மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொண்டு வந்தால் மட்டுமே மாநில அரசுகளுக்கு நிதி கிடைக்கும்.

மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறுபவர்களுக்கு மத்திய அரசின் நிதி கொடுக்க முடியாது, கேரளாவில் ஆளுநரை முழுமையாக காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிகிறது.

தமிழகத்தில் ஆளும் கட்சிக்காக ஆளுநரை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது, காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஒரு நிலைப்பாடு, தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு எடுக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் ஆளுநர் பதவி கொண்டு வரப்பட்டது, ஆளுநர் பதவியை பயன்படுத்தி பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்து இருக்கிறது.

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு கூட மத்திய அரசு நிதி கொடுத்து வருகிறது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக அரசு மக்களை குடிக்க வைக்கிறது.

மத்திய அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் குடியில் இருந்து மக்களை மீட்கிறது.

ஆய்வு செய்து பார்த்தால் மத்திய அரசு மாநில அரசுக்கு எவ்வளவு நிதிகள் வழங்கி வருகிறது என தெரிய வரும், மாநிலத்திற்கு நிதி கொடுக்கவில்லை என சொல்வது பேச்சுக்காக சொல்லப்படுகிறது, பாஜக மாநிலத்திற்கு 32 சதவீதமாக கொடுக்கப்பட்ட நிதியை 42 சதவீதமாக உயர்த்தியது என கூறினார்

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 217

    0

    0