எங்க கூட்டணியை பற்றி பேச ஹெச்.ராஜா யாரு? கொந்தளிக்கும் செல்வப்பெருந்தகை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2024, 4:11 pm

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் கு. செல்வபெருந்தகை இன்று(24.10.2024) திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வ பெருந்தகை கூறும் போது.., 2021 முன்பு கண்ட்ரோலர் ஆப் ஆடிட்டர் ஜெனரல் தீயணைப்பு வாகனங்கள் தாமதமாக வாங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு மேல் தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வாகனத்தை மாற்றம் செய்யவில்லை அதே வாகனத்தை பயன்படுத்துகின்றனர் என அறிக்கை கொடுத்திருக்கின்றனர் அது குறித்து இங்கு விசாரணை நடத்தியிருக்கிறோம்.

சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் நான்கு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் ஒரு வாகனம் வாங்கப்பட்டுள்ளன எங்கள் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை.

இதையும் படியுங்க: வயநாடுக்கு பொம்மை எம்பி தேவையில்லை.. பிரியங்கா குறித்து பாஜக வேட்பாளர் விமர்சனம்!

இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கின்றன உறுதியாக இருக்கிறது விரிசல் வருவதற்கு வாய்ப்பு இல்லை இந்தியா கூட்டணி குறித்து எச் ராஜா பேசுவதற்கு அவர் யார்.? என்ன தகுதி இருக்கிறது.

திராவிடம் என்ற சொல்லை விட்டு படித்தவர்களை தான் தாக்க வேண்டும் அவர்களை விட்டுவிட்டு தமிழ் தாய் வாழ்த்தை தாழ்த்துவது என்பது சரியில்லை அவருடைய போக்கு அப்படி தான் அப்படி தான் பேசுவார் என கூறினார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…