அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலியான சோகம் : 30 பேர் படுகாயம்.!!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2024, 8:01 pm

பெங்களூரில் இருந்து சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர அரசு பேருந்து மீது மொகிலி மலைப்பாதையில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

லாரி மோதி வேகத்தில் பேருந்தில் பின் டயர் ஒன்று வெடித்தும், லாரி கட்டுப்பாட்டை இழந்தும் முன்னாள் சென்று கொண்டிருந்த இரும்பு கம்பி லோடு ஏற்றப்பட்ட லாரி மீது மோதியது.

பேருந்து மோதிய வேகத்தில் லாரியின் ட்ரெய்லர் தனியாக பிரிந்து பள்ளத்தில் சென்று விழுந்தது. அதே நேரத்தில் லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் பேருந்து முன் கண்ணாடியை துழைத்து அதில் பயணித்த பயணிகள் மீது குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: இதுதாங்க கோயம்புத்தூர் குசும்பு.. சர்ச்சை நேரத்தில் பிசினஸ் ட்ரிக் : ‘அன்னபூர்ணா’ வெளியிட்ட வீடியோ!

இந்த விபத்தில் எட்டு பேர் மரணம் அடைந்த நிலையில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் பலமனேர் ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஜேசிபி வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் விபத்து காரணமாக அந்த பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 346

    0

    0