டாப் நியூஸ்

50 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்கள்.. ஃபிரிட்ஜிற்குள் காத்திருந்த அதிர்ச்சி.. பதற வைக்கும் பின்னணி!!

நேபாளத்தை சேர்ந்தவர் சரண்சிங் ராணா இவரது மனைவி மீனா. இவர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு நெலமங்களா பகுதிக்கு குடிவந்தனர்.

இவர்களுக்கு லட்சுமி, மகாலட்சுமி என்ற 2 மகள்களும் உக்கிம்சிங், நரேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். 2-வது மகளான மகாலட்சுமிக்கும் ஹேமந்த்தாஸ் (32) என்பருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி கணவரை விட்டு பிரிந்து பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள பசப்பா கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

மேலும் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மாலில் வேலை பார்த்து வந்தார். இவரை தினமும் ஒரு வாலிபர் வேலைக்கு அழைத்து சென்றார். கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

அவரை தாய் மற்றும் குடும்பத்தினர் பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை. இதையடுத்து மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் சகோதரர் உக்கிம்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் பெங்களூருவில் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேறு சாவி மூலம் பூட்டை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடல்பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: பள்ளி மாணவிகள் நடத்திய வளைகாப்பு விவகாரம் : நீக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் செய்த சம்பவம்!

முதலில் மகாலட்சுமியின் உடல் பாகங்கள் 30 துண்டுகளாக வெட்டி வைக்கபட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது உடல் பாகங்கள் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் தனியாக தனியாக பிரித்து வைக்கப்பட்டது. மேலும் மகாலட்சுமியின் தலையை 3 பகுதிகளாக வெட்டியிருப்பதும், கால்கள் துண்டிக்கப்பட்டு குடல், தலைமுடி உள்ளிட்ட பிற பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் தனியாக கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மகாலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் இந்த பிரேதப் பரிசோதனை நீடித்தது.

வழக்கமாக பிரேதப் பரிசோதனை செய்யும் போது ஒருவரின் உடல் முழுமையாக இருக்கும் ஆனால் மகாலட்சுமியின் உடல்பாகங்கள் சிறு, சிறு பாகங்களாக இருந்தது. இதனால் முதலில் அவரது உடல்பாகங்களை வரிசை எண்போட்டு டாக்டர்கள் ஒன்றாக சேர்த்தனர்.

அதில் ஏதேனும் பாகங்கள் விடுபட்டுள்ளதா? என்றும் அதன் பிறகு உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா? என்றும் பார்க்கப்பட்டது. மகாலட்சுமியின் உடலை கூறுபோடுவதற்கு முன்னதாக அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை அறிய உடலில் காயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று பரிசோதிக்கப்பட்டது.

மேலும் கொலையானது மகாலட்சுமி தான் என்பதை அடையாளம் காண உடல் பாகங்கள் தனியாக தனியாக டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் உடல் பாகங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்தது சிடி ஸ்கேன் செய்யப்பட்டது.

மேலும் கொலைக்கு முன்பாக பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. டாக்டர்களுக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

பிரதேப் பரிசோதனை முடிந்து மகாலட்சமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க்பபட்டது. கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர கொலை வழக்கை விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக மகாலட்சுமி வேலை பார்த்து வந்த மாலில் பணியாற்றும் உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் உள்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். எனவே அவர்கள் பிடிப்பட்டால் தான் முழு விவரமும் வெளியாகும்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மகாலட்சுமி பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பயன்படுத்திய 4 சிம்கார்டுகளும் மகாலட்சுமி வசித்த வீட்டை சுற்றியுள்ள கண்காணிப்பு காமிராக்களில் சில முக்கிய காட்சிகள் சிக்கி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 day ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

1 day ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

1 day ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 day ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.