திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனம்.. ஆய்வு செய்த அதிகாரிகள்.. விசாரணையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2024, 11:15 am

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படக் கூடிய லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய் திண்டுக்கல் மதுரை சாலையில் பிள்ளையார் நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் அனுப்பி வந்துள்ளது.

மேலும் படிக்க: நண்பர்கள் போல பழகி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி.. சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!!

இதற்கிடையே தற்பொழுது திண்டுக்கல்லில் இருந்து நெய் அனுப்பிய நிறுவனம் விலங்கு கொழுப்பு கலந்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் திண்டுக்கல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கழிவுநீர் மாதிரி ஆய்வுக்காக எடுத்துச் சென்றார்.

இதற்கிடையே இன்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நிறுவனத்தின் உள்ளே சென்று பால் நெய் உள்ளிட்ட பொருட்களை ஆய்வுக்காக எடுத்துச் செல்வதற்கு வந்துள்ளார்.

  • Ajith did Cheated the famous actress quits cinema 90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!