அந்தமான் நிக்கோபார் தலைநகரத்தின் பெயர் மாற்றம்.. மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2024, 6:51 pm

அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மருத்துவரின் அந்தரங்க உறுப்பை அறுத்த நர்ஸ்.. மருத்துவமனையில் நடந்த கூட்டுப் பாலியல் முயற்சி..!

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது.

நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு என்றார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 448

    0

    0