நான் நினைத்தால் வருவேன், போவேன் : அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2024, 12:11 pm

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், அமெரிக்க பயணத்தில் கிடைத்த முதலீடுகள் குறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கை தான்.

அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது குறித்து நன்றாகவே தெரியும்.

மேலும் படிக்க: திரௌபதி பட இயக்குநர் மோகன்.ஜி கைது : நள்ளிரவில் சத்தமே இல்லாமல் தூக்கிய போலீஸ்!!

கொளத்தூர் என்பது எனது சொந்த தொகுதி. அதனால் நினைத்த நேரத்தில் இங்கு வருவேன். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

மேலும் துணை முதலமைச்சர் பதவி , அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு ? ஏமாற்றம் இருக்காது , மாற்றம் இருக்கும் என மு.க ஸ்டாலின் பதில் அளித்தார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!