மகா பாவம் செய்துவிட்டார்கள்.. முன்னரே புகார் கொடுத்தோம் : பகீர் கிளப்பிய முன்னாள் தலைமை அர்ச்சகர்!

Author: Udayachandran RadhaKrishnan
20 செப்டம்பர் 2024, 4:29 மணி
Tirupati
Quick Share

ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்கள், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் ஆகியவற்றின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது என்று பலமுறை தேவஸ்தான நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

ஆகம சாஸ்திரத்தில் கூறியுள்ளது போல் சரியான நேரத்தில் சரியான முறையில் இறைவனுக்கு நெய்வேத்தியம் நடைபெறவில்லை என்று தெரிவித்தோம். என்னுடையது தனி மனித போராட்டமாக மாறிய காரணத்தால் பலன் கிடைக்கவில்லை.

ஐந்து ஆண்டு காலம் மாமிச கொழுப்பு மாமிசம் மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி பிரசாதங்கள் தயார் செய்து மகா பாவம் செய்து விட்டார்கள்.

மேலும் படிக்க: இஸ்திரி பெட்டிகளுக்கு இனி ரெஸ்ட்.. இனி துணிகளை நீங்க அயர்ன் பண்ண வேண்டாம்.. வந்தாச்சு புதிய இயந்திரம்!

பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் தொடர்பாக ஆய்வகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளை ஒரு ஆய்வாளர் என்ற முறையில் நானும் பார்த்தேன்.

அப்போது நெய்யில் மாமிசம், மாமிச கொழுப்பு மீன் எண்ணெய் ஆகியவை கடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடந்துவிட்ட தவறுக்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு தெரிவித்துள்ளார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 136

    0

    0