சரஸ்வதியை வணங்கிய ஆளுநர்.. மீண்டும் முற்றிய மோதல்

Author: Hariharasudhan
24 October 2024, 6:57 pm

படிக்கும் மேஜையில் சர்ஸ்வதியின் புகைப்படத்தை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று (அக்.24) சென்றார். தொடர்ந்து, அங்கு அவர் மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, “எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?” என மாணவ, மாணவிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் பதில் அளித்தனர். பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ““இனிவரும் காலங்களில் படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்” என்று அறிவுறுத்தினார்.

அது மட்டுமல்லாமல், சரஸ்வதி வந்தனம் பாடல், பள்ளியில் பாட பழக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் பள்ளி நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு ஆளுநர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ANBIL

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் “It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform” என வரையறுத்துள்ளார். அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிம்லாவில் சொந்த வீடு.. என்னை விட கம்மிதான் .. சொல்லாமல் சொன்ன ராகுல்

சமீபத்தில், டிடி தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற இந்தி மாதம் இறுதி நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று இருந்தார். அப்போது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வாக்கியம் இடம் பெறாமல் இருந்தது.

பின்னர், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அதற்கு ஆளுநர் தரப்பில் ‘மலிவான அரசியல்’ என விமர்சிக்கப்பட்டது. பின்னர், அதற்கும் ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் மீண்டும் சரஸ்வதி குறித்து ஆளுநர் பள்ளியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 192

    0

    0