திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கனிகிலுப்பை கிராமத்தில் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த 5 வயது சிறுமி உயிரிழப்பு காரணமாக குளிர்பானம் குடித்து உயிர் இறக்கவில்லை என்று குளிர்பான நிறுவனத்தின் உதவி மேலாளர் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலட்சுமி இவர்களுக்கு ரித்தீஷ் என்ற 8 வயது மகனும் காவியாஸ்ரீ என்ற 5 வயது மகளும் உள்ளனர்
இதில் அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரித்திஷ் நான்காம் வகுப்பும் மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காவியா ஸ்ரீ கடந்த 10-8-2024 தேதி வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் கொடுத்து டெய்லி பிரஸ் என்ற மாம்பழ குளிர்பான பாட்டிலை வாங்கி வந்து குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி மூக்கிலும் வாயிலும் நுரை வந்து சிறுமி காவியா மயங்கியுள்ளார்
இதனை அறிந்த பெற்றோர் காவியாஸ்ரீயை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி காவியாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இதுகுறித்து சிறுமியின் தந்தை ராஜ்குமார் டெய்லி பிரஸ் குளிர்பானம் குடித்து குழந்தை இறந்ததாக கூறி தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் அதனைத் தொடர்ந்து சிறுமி உயிர் இழப்பு செய்து பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த நிலையில் டெய்லி பிரஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தீவிர ஆய்வு செய்து சிறுமி குடித்த குளிர்பான மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்
இந்த நிலையில் நாமக்கல் பகுதியில் செயல்படும் டெய்லி பிரஸ் ப்ரூட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவி மேலாளர் கனகராஜ் மற்றும் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் செய்யாறு அடுத்த கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் 5 வயது காவியா ஸ்ரீ என்பவர் டெய்லி பிரஸ் மேங்கோ குளிர்பானத்தை சாப்பிட்டு குழந்தை இறக்கவில்லை என்றும் குளிர்பானம் தரமானது என்று சென்னையில் உள்ள நேஷனல் புட் லிபரட்டரி சர்டிபிகேட் வழங்கி உள்ளது என்று கூறி செய்யாறு அடுத்த தூசி காவல் நிலையத்தில் நிறுவனத்தின் பெயர் கூறி நிறுவனத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியும் நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்படுத்திய கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நிறுவனத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்
ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட குளிர்பானம் குடித்து 5 வயது சிறுமி உயிர் எழுந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.