டாப் நியூஸ்

அஜித்குமார் ஹெல்மெட்டில் தமிழக அரசு லோகோ.. என்ன காரணம்?

நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் பந்தயத்தில் பிஸியாக இருந்து வரும் நிலையில், அவரது ஹெல்மெட்டில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ பயன்படுத்தி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது தொடர்பான அப்டேட்ஸ் அவ்வப்போது வந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

இதனிடையே, அஜித்குமாருக்கு பிடித்தமான கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். இதன்படி, அஜித்குமார் 24H துபாய் 2025 போட்டியில், பந்தய அணியின் உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் பங்கேற்பார் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 24H துபாய் 2025 மற்றும் போர்ஷே 992 GT3 கோப்பை கிளாசில் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார்.

மேலும், அஜித்குமார் தலைமையிலான அணிக்கு Ajithkumar Racing எனப் பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், அவ்வப்போது அஜித்தின் மாஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும். இந்த நிலையில், நேற்றும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய SDAT (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.இதன் மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதையும் படிங்க : இனி விமர்சனம் அதிகமாகும்.. விஜய் கடிதம்

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், Formula 4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், ” தமிழ்நாடு விளையாட்டு துறை உலக அளவில் செல்கிறது. Ajithey அஜித் குமாருக்கு சிறப்பு நன்றிகள்” எனப் பதிவிட்டு உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

41 minutes ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

1 hour ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

14 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

15 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

16 hours ago

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…

17 hours ago

This website uses cookies.