தேவையில்லாத செலவு.. திமுக அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன் : காங்., எம்பி கார்த்தி சிதம்பரம் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2024, 2:38 pm

வருடத்திற்கு 2 முறையாவது முதலமைச்சர் வெளிநாடு சென்ரு முதலீடுகளை பெற்று வரவேண்டும், சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் மூலம் உலக அளவில் சென்னை கவனத்தை ஈர்ர்க்கும், தமிழ்நாட்டில் தமிழ் மொழியே திணிக்கப்படுவதில்லை என கோவையில் காங்கிரஸ் நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தியபின் செய்தியாளர்களிடம் பேசும்போது கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

கோவை துடியலூர் அருகில் உள்ள பன்னீர்மடை மதுராநகர் பகுதியில் குடியிருக்கும் காங்கிரஸ் நிர்வாகி மோகன் ராஜ் கவுசல்யா ஆகியோரின் மகன் சத்தியசீலன் பிரீத்தி இவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்திக் சிதம்பரம் எம்.பி. மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திக்கும் போது கூறியதாவது தமிழ்நாட்டில் முதலமைச்சர் வெளிநாடுகளில் சென்று முதலீடு பெறுவது ஒரு தேவையான ஒன்று. வருடத்திற்கு இரண்டு முறை மூன்று முறை சென்று கூட முதலீடு செய்யலாம் அதை நான் வரவேற்கிறேன்.

இதனால் பல வேலை வாய்ப்பை உருவாக்க வாய்ப்புள்ளது. சென்னையில் கார் ரேஸ் போன்ற நிகழ்ச்சி நடத்துவதால் இந்த கார் ரேஸ் மூலம் சென்னை மாநகரம் உலக அளவில் தெரியப்படுத்தக்கூடிய பகுதியாக அறியப்படுகிறது .அதை நான் வரவேற்கிறேன் .

மேலும் கூவம்நதியை சுத்தப்படுத்துவதாக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக மேயர் தன்னுடைய செய்தியில் சொல்லி இருக்கிறார்.

அதற்கு நான் முழுமையான வெள்ளை அறிக்கையை கேட்டு இருக்கிறேன். அதில் சில செய்யப்பட்ட தொகை சரியானது தானா, தூய்மை செய்தும் ஏன் தூய்மை அடையவில்லை அதற்கான காரணம் என்ன அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் அதை நான் கேட்டிருக்கிறேன். என்றார்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!