பெரியார் சிலைக்கு மரியாதை அளிக்க வந்த விஜய்.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 6:24 pm

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என அப்போதே தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர் திமுகவின் பி டீம், பாஜகவின் பீ டீம் என பரவலாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதே போல விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியுள்ளதால் அவர் திமுகவின் பீ டீம் தான் என்ற விமர்சனங்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கின்றன.

மேலும் படிக்க: ஹெச் ராஜாவை உடனே தூக்கி உள்ளே போடுங்க… காங்கிரஸ் கட்சியினர் வைத்த திடீர் DEMAND..!!

ஆனால் விமர்சனத்துக்கு இதுவரை பதில் சொல்லாத விஜய், தானுண்டு தன் வேலையுண்டு என கட்சி பணிகளையும், சினிமா படங்களிலும் மும்முரத்தை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக்கழத் தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த திமுக ஆதரவாளர்கள் விஜய்யை கண்டதும், செல்பி எடுக்க ஓடி வந்தனர். தவெக தலைவர் விஜய்யிடம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இது அரசியல் ரீதியாக கவனத்தை பெற்றுள்ளது.

பெரியார் பிறந்தநாளில் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என இன்று காலை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 241

    0

    0