மரண நகரமாக மெரினா மாறியது ஏன்? இந்த அவலத்துக்கு காரணம் இதுதான்..!!
Author: Udayachandran RadhaKrishnan7 October 2024, 2:18 pm
விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண கூடிய கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்காக காரணம் என்ன என்று அலசுவோம்
நேற்று மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்வு நடைபெற்றது. இதைக் காண குவிந்த மக்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்
சுமார் 13 முதல் 15 லட்சம மக்கள் கூடுவார்கள் என்பது எதிர்பாராத ஒன்று. ஒருவேளை எதிர்பார்த்திருந்தாலும் 15 லட்சம் பேர் வரை சமாளிக்க திட்டமிடல் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
அண்ணா சாலை , மெரினா சாலையில் பிற்பகல் நேரத்தில் போலீசார் இல்லாததும் ஒரு காரணம்.
போலீசார் அதிகமாக மெரினாவிலேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனனர். கடுமையான வெயில், நீர் இழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் வர காரணமாக அமைந்திருக்கிறது.
தண்ணீர் பந்தல் ல்லாததால், கடைகளில் மட்டுமே தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கும் லைனில் நின்று வாங்கே வேண்டும்.
விமான சாகசம் நடந்த போது மெரினாவில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இதில் கடுமையான கூட்ட நெரிசல் என்பதால் மக்கள் தாகத்தில் தவித்துள்ளனர்.
அதே போல மக்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதும் தவறு. சில சாலைகளில் கார்களை உள்ளே விட்டதால் மக்கள் வெளியேற முடியாமல் திணறினர்.
காமராஜர் சாலையை இணைக்கும் சாலைகளில் உள்ள கடைகள் மூடப்பட்டது. டீக்கடைகள், இளநீர் கடைகள் என மூடப்பட்டதால் மக்கள் நீர் இழப்பு காரணமாக தவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடிய மக்களால், காற்றோட்டம் இல்லாமல் மூச்சு திணறல், படபடப்பு, நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. பலரும் மயக்கம் அடைந்தும் வெளியேற முடியாமல் தவித்தனர். நெரிசல் காரணமாக மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாத சூழல் உருவானது.
தற்காலிக மருத்து சேவை இருந்தும், அவசர சிகிச்சை மட்டுமே செய்ய முடியும் என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது சவாலாக மாறியுள்ளது. இவையெல்லாம் முன்கூடியே திட்டமிடாமல் இருந்ததால் தான் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.