ஆசிரியருக்கு பாத பூஜை செய்வதில் என்ன தவறு? அது நம்ம கலாச்சாரம்.. அமைச்சர் வேஸ்ட்.. தமிழிசை சாடல்!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2024, 8:02 pm

சென்னை OMR சாலை காரப்பாக்கத்தில் 25ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக மாமன்ற உறுப்பினர் லியோ சுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் ஆளுநர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது :- பள்ளிக் கல்வித்துறை பொறுத்தவரை பல குழப்பங்களுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். சரியான வழிமுறை பள்ளிக் கல்வித்துறையில் இல்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்ததை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்று தாம் கூறியுள்ளார்.

அரசி பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசாங்கம் அனுமதிக்காமல் யாரையும் அழைத்திரிக்க மாட்டார்கள். ஆசிரியர்களை பலிக்காடா ஆக்குகிரார்கள் என்பது எனது கருத்து. ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்வது மாணவர்களின் அக்கறைக்கு எதிரானது.

மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்கள் அனைவருக்கும் பாத பூஜை செய்யலாம். பாத பூஜை செய்வது நமது கலாச்சாரத்தில் ஒன்று இதை அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து என தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்தார்.

மேலும் ஒரு கோடி பேர் உறுப்பினர் சேர்க்கைக்காக எனக்கு 11 மாவட்டங்கள் கொடுத்துள்ளனர். அதற்காக நான் கிருஷ்ணகிரி முதல் நீலகிரி வரை உறுப்பினர்கள் சேர்க்கைக்காக நான் செல்கிறேன் என்றார்

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?