பைக்கில் பட்டாசு எடுத்துச் சென்ற இளைஞர் பலி.. ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் சோகம்!

Author: Hariharasudhan
1 November 2024, 11:22 am

உளுந்தூர்பேட்டையில் பட்டாசுகளை பைக்கில் கொண்டு சென்றபோது ராக்கெட் பட்டாசு பட்டதில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரைச் சேர்ந்தவர்கள் டேவிட் வில்சன், ஆண்டனி பிரேம்குமார் மற்றும் பவுல்ராஜ். இந்நிலையில், இவர்கள் மூவரும் தீபாவளி நாளான நேற்று (அக்.31) இரவு 08.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்து உள்ளனர்.

அப்பொழுது, அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ராக்கெட் பட்டாசு ஒன்று. இவர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசின் மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது.

ELURU

இந்த விபத்தில் மூவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அங்கு இருந்தவர்கள் உடனடியாக மூன்று பேரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதையும் படிங்க: மகன் இறந்தது கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற தம்பதி : சோக சம்பவம்!

இந்த நிலையில், இதில் டேவிட்சன் (22) என்ற இளைஞர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு இளைஞர்கள் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, நேற்று ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் பட்டாசுகளை ஏற்றிச் சென்ற இருசக்கர வாகனம் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அவருடன் சென்ற ஒருவர் உள்பட அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த 5 பேர் என மொத்தம் 6 பேர் படுகாயங்கள் உடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!