பேசியது 80… கொடுத்தது 25 : பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. கண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம் வாபஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 10:01 pm

வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கொண்டு வரப்படும் சரக்குகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதற்காக 5000 மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் இயங்கி வருகின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை உயர்த்த ப்படவில்லை. இதனால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இயங்கும் கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அதன்படி சென்னை துறைமுகம் மற்றும் காட்டு பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் கடந்த 3ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 80% வாடகை உயர்வு வழங்க வேண்டும் கோரி துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் நடத்திய வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வாடகை 80% உயர்வு கோரிய நிலையில் 25% வாடகை உயர்வுக்கு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 4 நாட்கள் நடத்தப்பட்ட போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 664

    0

    0