பாஜக எங்கு வளர்ந்தாலும் ஆபத்து தான்.. கர்நாடகாவில் மட்டுமல்ல எந்த மூலைக்கு சென்றாலும் எதிர்ப்பேன் ; திருமாவளவன் ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
6 May 2023, 10:22 am

பாஜக எங்கு வளர்ந்தாலும் ஆபத்து என்பதாலேயே கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூர் கொல்லாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகர் அணி சார்பில் திருமாவளவன் மணிவிழா மற்றும் வணிகர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தின் மத்தியில் பேசிய திருமாவளவன் பாஜக தமிழகத்தில் வளர்ந்தாலும், கர்நாடகாவில் வளர்ந்தாலும், ஏன் இந்தியாவின் எந்த மூலையில் வளர்ந்தாலும் ஆபத்து என்பதாலேயே கர்நாடகாவில் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கூறினார். மேலும் வீட்டில் ஒரு மூலையில் தீப்பிடித்தால் ஒட்டுமொத்த வீட்டிற்கும்தானே ஆபத்து என்றும், மேலும் ஒரு குடம் பாலில் ஒரே ஒரு துளி விஷம் விழுந்தாலும் நஞ்சுதான் என்று பாஜகவை விமர்சனம் செய்தார்.

மேலும் வணிகர்களுக்கு என்றும் விசிக துணை நிற்கும் எனவும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அரியலூர், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விசிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?