தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மீண்டும் மீண்டும் அவமதிப்பு : தடாலடி உத்தரவை போட்ட தமிழக அரசு..!!

Author: Babu Lakshmanan
26 January 2022, 5:32 pm

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்தை மீடும் அவமதித்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்என் ரவி தேசியக் கொடியை ஏற்றினார். அதோடு, அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் அவமதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள்,கர்ப்பிணிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது எழுந்து நிற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேட்ட போது, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வங்கி அதிகாரிகளின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழக அரசு மேலும் சில கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். இசைத்தட்டுகளை கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை வாய்ப்பாட்டாக பாட வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…