+1 பொதுதேர்வு ரத்தாகிறதா? லேப்டாப் வழங்கும் திட்டம் நிறுத்தி வைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 10:25 am

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறப்பாக படித்தது போல் இந்த ஆண்டும் பள்ளிகளுக்கும், ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் படிக்க வேண்டும். கோடை விடுமுறைக்கு பின் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர்.

8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை மற்றும் 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 6-12ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு வேண்டும். புதிய பஸ் பாஸ் வழங்குவது குறித்து போக்குவரத்து துறையுடன் பேசி முடிவெடுக்கப்படும். பள்ளி சீருடையில் இருந்தாலே பஸ்சில் இலவசமாக பயணிக்க அனுமதி உண்டு என்றார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை.நடப்பாண்டு அதிக அளவில் தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் அதிக தேர்ச்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்து பணியாற்ற வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போரை தேர்வு இல்லாமல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக மாநில கல்விக் கொள்கையில் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசின் நிதிநிலைமை சீரான பின்னர் லேப்டாப் வழங்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு டேட்டா கார்டுடன் இலவச டேப்லெட் வழங்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆனால் கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட திட்டமான லேப்டாப் கடந்த சில ஆண்டு காலமாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 455

    0

    0