அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை : இளநீர் விற்கும் தாயம்மாளை பெருமைப்படுத்திய பிரதமர்.. கவுரவித்த ஆட்சியர்!!
Author: Udayachandran RadhaKrishnan30 January 2022, 4:00 pm
திருப்பூர் : உடுமலை அருகே அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் நன்கொடை அளித்த இளநீர்விற்க்கும் பெண் தாயம்மாளையும் அவரது கணவரையும் நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்னவீரம்பட்டியில் கனவர் ஆறுமுகத்துடன் இணைந்து இளநீர் கடை நடத்திவருபவர் தாயம்மாள். தங்களது ஊரில் உள்ள அரசுபள்ளி மேம்பாட்டுபனிக்கு ஏதாவது செய்திட வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்து வந்த தாயாம்மாள் ஏதேச்சையாக் பள்ளி பகுதிக்கு செல்ல அங்கு கட்டிட பணி நடைபெற்றிருப்பதை பார்த்தார்.
இதையடுத்து அதற்க்கு நிதி தேவைப்பட்டதையும் ஆசிரியர்கள் பேசிகொண்டிருந்ததை கேட்ட தாயம்மாள், தான் ஏதாவது தரலாமா என தலைமை ஆசிரியரிடம் கேட்க, தங்களால் முடிந்ததை தரலாம் என தலைமையாசிரியர் கூறியுள்ளார்.
உடனடியாக வீட்டிற்கு சென்ற தாயம்மாள் கணவரிடம் பேசி ஒரு லட்சதிற்கான காசோலையை தலைமையாசிரிடம் தம்பதிகள் இருவரும் கொடுத்துள்ளனர்.
இளநீர் விற்கும் சூழலிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்ததை மகிழ்வுடன் பெற்றுகொண்ட தலைமையாசிரியர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தர நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி அவர்களை பாராட்டினார்.
இதனிடையே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தம்பதிகளை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
இந்த நிலையில் வார வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் மோடி, இன்று திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் விற்கும் தாயம்மாள் என்ற பெண்ணை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், பொருளாதார நிலை சரியில்லாத போதும் தனது கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி கட்டமைப்புக்கு தாயம்மாள் ஒரு லட்சம் நன்கொடை அளித்தார் என பேசி பெருமைப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில் நன்கொடை அளித்தது குறித்து பேசிய தாயம்மாள், ஊருக்கு கோவில் முக்கியம் என்பது போல் பள்ளியும் முக்கியம் நம்மால் முடிந்ததை பள்ளிக்கு செய்யும் போது பள்ளியும் தானே வளர்ச்சி பெறும் என்பதால் தன்னால் முடிந்ததை சிறு தொகையாய் தந்திடாமல் ஒரு நல்ல தொகையாக அளித்ததாக கூறினார்.
பாராட்டிற்கோ விளம்பரத்திற்கோ ஆசைபடாமல் தன் மனதில் தோன்றித நல்ல விசயத்தை உடனடியாய் செய்துவிட்டு சென்ற தாயாம்மாள் – ஆறுமுகம் தம்பதிகளுக்கு ஊரார் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.