பிறந்து 1 மாதமே ஆன ஆண் குழந்தை கொலை.. மூட நம்பிக்கையால் தாத்தா செய்த கொடூர செயல் : ஷாக் ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2024, 2:43 pm

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

சங்கீதாவிற்கு 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை உள்ளது. பிறந்த குழந்தையுடன் சங்கீதா, உட்கோட்டையில் தனது பெற்றோர்களுடன் இருந்துள்ளார். கடந்த 14ம் தேதி அதிகாலையில் தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, சங்கீதாவும் தூங்கிவிட்டார். காலை எழுந்து பார்த்தபோது, தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேடி பார்த்தில் வீட்டுக்கு பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த கிடப்பது கண்டறியப்பட்டது. அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி அழுதுள்ளார்.

ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு, குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர். குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்தில் சந்தேகம் எழுந்த நிலையில், தாத்தா வீரமுத்துவை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனது பேரனை தானே கொன்றதாக வீரமுத்து ஒத்துக் கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குழந்தையின் தாத்தா வீரமுத்து வயது 58 என்பவர் சித்திரை மாதம் (6.5.24) குழந்தை சாத்விக் பிறந்ததால், தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றும், தனது சம்மந்தி குடும்பத்திற்கும் ஆபத்து என்றும் அனைவரும் கூறியதாலும் மருமகள் சங்கீதாவின் திருமணத்திற்கு ஏற்கனவே நிறைய கடன் வாங்கியதாலும் மேலும் இந்த குழந்தை பிறந்ததால் இதற்கு சீர் செய்ய வேண்டிய கடன் வாங்கியதாலும் விரக்தியில் இருந்துள்ளார்.

மேலும் தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ளதால் ஆண் மகன் இருந்தால் சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் அவனது உயிருக்கு ஆபத்து என்றும் ஆண் மகன் இல்லாததால் தாத்தாவாகிய தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும் அனைவரும் கூறியதால் முதலில் குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கேயாவது விட்டு விட்டு வந்துவிடலாம் என்று எண்ணினேன். சித்திரை மாதம் ஆபத்து பயத்தாலும் தன்னுடைய உயிர் பயத்தாலும் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அதிகாலை குழந்தையை தூக்கிக் கொண்டு தண்ணீர் நிரம்பிய பேரலில் போட்டு போர்வையை போட்டு மூடியை போட்டு மூடி விட்டு வீட்டில் வந்து அதிகாலை அனைவரையும் எழுப்பி குழந்தை எங்கே என்று காணவில்லை என்று தானும் உடன் தேடி பேரலில் இருந்து குழந்தையை கண்டுபிடித்து சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை வந்து சேர்த்ததாக கூறியுள்ளார்.

ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன், குழந்தையை கொன்ற தாத்தா வீரமுத்துவை கைது செய்தார். மேலும் உட்கோட்டை வீட்டில் வைத்து வீரமுத்து குழந்தையை எப்படி கொன்றார் என்பதை சாட்சிகள் முன்னிலையில் நடித்துக் காட்டி, போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என்ற அச்சத்தின் காரணமாக தாத்தாவே 38 நாட்களை ஆன பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்