வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு வழக்கு : நாளை தீர்ப்பு வெளியிடுகிறது உச்சநீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 9:12 pm

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. அதனை விசாரித்த நீதிபதிகள் 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1195

    0

    0