10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு : தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது தெரியுமா..?
Author: Babu Lakshmanan2 March 2022, 1:54 pm
சென்னை : 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
கடந்த 2 ஆண்டு கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நேரடி பொதுத்தேர்வு இந்த முறை நடக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதன்படி, மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. ஜுன் 23ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.

மே 6 முதல் மே 30ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜுலை 17ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5 வகுப்பு வரை – மே 13ம் தேதி கடைசி பள்ளி வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 13ம் தேதி ஆசியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. 11ம் வகுப்பை தவிர்த்து பிற வகுப்பு மாணவர்களுக்கு ஜுன் 20ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜுன் 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.