3 மாணவர்கள் பலி; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை; 10 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்…!!
Author: Sudha8 August 2024, 9:32 am
டில்லியில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையினால், பழைய ராஜிந்தர் நகரில் செயல்பட்டு வந்த ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதில் சிக்கிய 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பயிற்சி மையங்கள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாக செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உத்தரவின் பேரில், டில்லியில் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், 10 பயிற்சி மையங்களின் அடித்தளங்களில் விதிகளை மீறி அறைகளும், நூலகமும் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மையங்களுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.