10% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் 103வது திருத்தத்தின் மூலமாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது.
இதனை எதிர்த்து பல மாநில உயர் நீதிமன்றங்களிலும்,உச்சநீதிமன்றத்திலும் திமுக உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றம் அனைத்து மனுக்களையும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு ஏற்று கொண்டு அனைத்து தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட பின் இந்த வாரம் 7 ஆம் தேதி தீர்ப்பை வெளியிட்டது.
இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலினத்தோர்,பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட ‘103வது திருத்தம் செல்லும்’ என்று ஐவர் நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் தெரிவித்ததால், இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கம் போல் திமுக தலைவர், திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் அவர்களது தோழமை கட்சியில் பெரும்பாலானோர் இந்த தீர்ப்புக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி EWS இட ஒதுக்கீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பே அமல்படுத்திவிட்டது, ஆனால் தமிழகத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். திமுகவிடம் நாவை அடகு வைத்து பிழைப்பை நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
தமிழகத்தில் 55 இட ஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளை முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்தவர்கள், தாவூத் மற்றும் மீர் இஸ்லாமியர்கள் போன்ற 79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள். அனைத்து தரப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான்.
எனவே, இன்று நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை. திமுகவை போல் போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது. ஆகவே EWS இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சி புறக்கணிக்கிறது என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.