தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றிய 10 ஆயிரம் மாணவர்கள் : அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2022, 2:35 pm

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் காலை 9 மணி அளவில் தேர்வு எழுத தொடங்கி மதியம் 12:30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் ஒன்றரை மணி நேரம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் எதற்காக என்றால் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைதாள்களை பதிவேற்றம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த தேர்வில் வினாத்தாளை தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கும், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கும் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது.

அதன்படி 10,000 மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அப்சென்ட் போட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து துணைவேந்தர் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தெரிய வரும் என கூறப்பட்டது.இது மாணவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,தாமதமாக பதிவேற்றிய மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,அமைச்சர் கூறியதாவது: மாணவர்கள் கால தாமதமாக பதிவேற்றிய விடைத்தாள்களும் திருத்தப்படும்.எனவே,மாணவர்கள் யாரும் கவலை அடைய வேண்டாம்.இணையதள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகி இருக்கலாம்,இதனால்,அவர்களது விடைத்தாள்களும் திருத்தப்படும், என்று தெரிவித்துள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1341

    0

    0