திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.1000 கோடி வரைக்கும் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. அதன் பேரில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாகக் கூறி, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி அதிகாலை முதல் 5வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.1.20 கோடி பணம் கட்டு கட்டாக எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து 2.45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகயுள்ளது. அதே போல, சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, ஜெகத்ரட்சகனின் மருமகன் நாராயணசாமி இளமாறனிடம்வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.1000 கோடி வரைக்கும் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சவிதா குழுமம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும், சோதனையில் 18 கிலோ தங்க நகைகள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.