திமுக உள்ளிட்ட கட்சிகளை அதிர வைத்த இபிஎஸ்…. கிருஷ்ணகிரியில் நடந்த தரமான சம்பவம் ; அதிமுகவுக்கு தாவிய 10,000 பேர்..!!
Author: Babu Lakshmanan11 February 2024, 3:46 pm
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 10000 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி – பர்கூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் சுமார் 10 ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி தி.மு.க. ஆட்சி செய்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் 40% அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சி அமைக்கும் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள்.
பாஜகவுடன் அ.தி.மு.க. மறைமுக உறவு வைத்திருப்பதாக தொடர்ந்து கூறுகின்றனர். முன்பே அறிவித்துவிட்டோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம்.
சரியான நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க தி.மு.க. மறுக்கிறது. வாக்களிக்கும் மக்களை மட்டுமே அ.தி.மு.க. நம்புகிறது, எனக் கூறினார்.