பத்மஸ்ரீ விருது வென்ற 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் காலில் விழுந்த பிரதமர் மோடி : நெகிழ்ந்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 8:07 pm

டெல்லியில் உலக சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023க்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கோவை மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், உலக சிறுதானியங்கள் மாநாட்டில் பங்கேற்ற கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். எனது பிரதமர், எனது பெருமை என பதிவிட்டுள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 502

    0

    0