பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்தப் பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 94 ஆயிரம் பேர் மட்டுமே எழுதியுள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 0.16% கூடுதலான தேர்ச்சி விகிதம் ஆகும். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகள் 87.90 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.43 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்வெழுதிய சிறைவாசிகளில் 260 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 228 பேர் ஆகும்.
மேலும் படிக்க: அன்று ஜிஎஸ்டி அதிகாரி… இன்று போலீஸ் அதிகாரி… நடந்து சென்றவரிடம் 1.5 லட்சம் வழிப்பறி டிப்டாப் நடிகர் கைது..!!
10ம் வகுப்பு தேர்வு பாட வாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை
தமிழ் – 8 பேர்
ஆங்கிலம் – 415 பேர்
கணிதம் – 20,619 பேர்
அறிவியல் – 5,104 பேர்
சமூக அறிவியல் – 4428 பேர்
பாடவாரியான தேர்ச்சி விகிதம்
மொழிப்பாடம் – 96.85
ஆங்கிலம் – 99.15
கணிதம் – 96.78
அறிவியல் – 96.72
சமூக அறிவியல் – 95.74
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று முதலிடம் ; வேலூர் மாவட்டத்தில் தான் குறைந்தபட்சமாக 82.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.