கொரோனா பாதிப்பே இல்லாத 11 மாவட்டங்கள்… 150க்கும் கீழ் குறைந்த எண்ணிக்கை : தமிழகத்தில் இன்றைய நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2022, 8:06 pm

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 469 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 387 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் சென்னையில் 62 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேருக்கும், கோவையில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி