ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ₹11 லட்சம் பரிசு.. பாஜக கூட்டணி எம்எல்ஏ சர்ச்சை அறிவிப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2024, 4:40 pm

சமீபத்தில மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா சென்றார். அங்கு பேசிய அவர், இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்திற்கு இந்தியாவில் உள்ள பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தன.

இதனையடுத்து, இட ஒதுக்கீட்டை ராகுல்காந்தி ஒழிக்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இது தொடர்பாக பேசிய சஞ்சய் கெய்க்வாட், “மகாராஷ்டிராவிலும் , நாட்டிலும் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் காந்தி, நாட்டில் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்யான தகவல்களை பேசிய ராகுல்காந்தி இப்போது இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவரது உண்மையான முகத்தை காட்டிவிட்டார் என்று தெரிவித்தார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…