12 வயது சிறுமி கூட்டுப்பாலியல் கொடுமை : இளைஞர்கள் வெறிச்செயல்… அதிர வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2023, 2:25 pm

12 வயது சிறுமி கூட்டுப்பாலியல் கொடுமை : இளைஞர்கள் வெறிச்செயல்… அதிர வைத்த சம்பவம்!!

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியிடம் செல்போன் மூலம் 3 இளைஞர்கள் பழகியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் சிறுமியை தனியாக அழைத்து சென்ற 3 இளைஞர்களும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில், தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பல நாட்களுக்கு பிறகு நேற்று தனது குடும்பத்திடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பங்கஜ், விஷால், சுக்ரீவ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 587

    0

    0